அன்னாசிப்பழம்
காது மற்றும் சளித்தொல்லை போன்றவற்றிற்கு அன்னாசி நல்ல பலனைத் தருகிறது.
உடலில் இரத்தத்தை விருத்தி செய்யவும், உடலுக்கு பலத்தை தரும் சக்தியும் இதற்கு உண்டு.
கண் பார்வையை மேம்படுத்துதல், எலும்புகளை வலிமையாக்குதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், தொப்பையை குறைத்தல் போன்றவற்றிற்கும் சிறந்ததாக உள்ளது.
அன்னாசி, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது.
உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர்செய்யும் தன்மையும் இந்த ப்ரோமிலைனுக்கு உண்டு.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
அன்னாசியை தொடர்ந்து சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
மேலும் மார்பகம், சுவாசப்பை, ஆசனவாய் போன்ற இடங்களில் புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
