ஆடு

ஆடு

bookmark

ஆடு 

ஆடு ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன.ஆடுகள் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணக்கப்படி உலகம் முழுதும் 92.4 கோடி ஆடுகள் உள்ளன.