இலந்தைப் பழம்

இலந்தைப் பழம்

bookmark

இலந்தைப் பழம்

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த, முட்கள் உள்ள குறுமரம் ஆகும். இதன் தாயகம் இந்தியாவிலுள்ள தமிழ் நாடு அல்லது சீனா எனக் கருதப்படுகிறது. வெப்பம் அதிகமுள்ள இடங்களில், இத்தாவரம் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் இயல்புடையது ஆகும். இதன் பழங்கள் செம்பழுப்பு நிறத்தில் சற்று பெரிய கொட்டைகளை உடையதாகவும், இனிப்பும், புளிப்பும் கலந்தச் சுவை கொண்டதாயும், சிறு உருண்டைவடிவத்தில் இருக்கும்...இம்மரத்தின் பழங்கள் உண்ணக்கூடியவையே...மேலும் இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது.இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை எனவும் அழைக்கப்டுகின்றன. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே ஆகும்.