ஒப்பாரி கலைஞர்

bookmark

"தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?" 
"டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..!"

எத்தனை 'கட்டிங்' அடித்தாலும், தள்ளாடாமல் ஸ்டெடியாக உள்ளது எது? 
"முடி திருத்துபவனின் கத்திரிக்கோல்!"

"கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..." "ஏன் என்னாச்சு?" 
"ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!"

"லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?" லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது! எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்!"

"அந்த சீரியல் டைரக்டர் பக்கத்துல ஒப்பனைக் கலைஞர் இருக்கார், சரி... இன்னொரு பக்கத்துல இருக்கிறது யாரு?" "அவர் ஒப்பாரி கலைஞர். நல்லா அழறது எப்படின்னு சொல்லித் தருவாரு!"