கார்முகப் படலம் - 757
757.
என். “இது கொணர்க” என.
இயம்பினான்?’ என்பார்;
‘மன்னவர் உளர்கொலோ
மதி கெட்டார்?’ என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்
முடிக்கில் ஆம்’ என்பார்;
கன்னியும் இச் சிலை
காணுமோ?’ என்பார்.
இது கொணர்க என- இந்த வில்லைக் கொண்டு வருக என்று; என்
இயம்பினான் - எதற்காகச் சொன்னான் (இம் மன்னன்); என்பார் -
என்று கூறுபவர்களும்; மதி கெட்டார் (வில்லை வளைக்க விரும்பிய)
இம் மன்னனைப் போல; மன்னவர் உளர்கொல் - அறிவற்ற அரசர்
வேறு யாரேனும் இருக்கினறார்களா?; என்பார் - என்று
சொல்பவர்களும்; முன்னை ஊழ்வினையினால் - முற்பிறப்பில் செய்த
நல்வினையால்; முடிக்கில் ஆம் என்பார் - ஒரு
வேளை வளைத்தலும் கூடும் என்று கூறுபவர்களும்; கன்னியும்
இச்சிலை - கன்னியான சீதையும் இந்த வில்லை; காணுமோ என்பார்
- கண்டிருப்பாளோ என்று சொல்பவர்களும்.
இந்த வில்லைக் கன்னியின் திருமணத்தின் பொருட்டு வைத்த
இவனைப் போல மதிகெட்ட அரசர் இருக்கமுடியாது என்பது.
வளைக்கப்படாது கிடக்கும் இந்த வில்லைச் சீதை கண்டாள்
கலங்குவாள் என்றார். 8
