சர்க்கரை பொங்கல்
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு?
மனைவி: பொங்கல்ல சர்க்கரை போட்டிருக்கேன்...!
"என்னதான் அதி நவீன பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு செய்ய முடியாது!"
"என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"
"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே."
"நான் என்ன சாதிச்சேன்?"
"பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
"அந்த அலுவலகத்திலே.. எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே.. ஏன்?"
"அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்.."
"அதை 'சிம்பாலிக்'கா உணர்த்தறாங்களாம்.. லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு"
