சாத்துக்குடி

சாத்துக்குடி

bookmark

சாத்துக்குடி உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வை ஏற்படுத்துகிறது.
 இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதால் இரத்தசோகை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.
 

சாத்துக்குடியில் கால்சியம் சத்து உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகள் வலுவிற்கும் இன்றியமையாததாக விளங்குகிறது.

மேலும் ஞாபக மறதி, பசியின்மை, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக சாத்துக்குடி விளங்குகின்றது.

இந்த பழத்தில் உள்ள லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என கருதப்படுகிறது.

சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து பளபளப்பாக காணப்படும். மேலும் சிறுநீரகத் தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.