சி.தியாகராசர்
ஆரம்பக் கல்வி::
தியாகராசர் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் எண்ணையும் எழுத்தையும் தொடக்கக் கல்வியாகப் பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் பயின்றார்.
அவரின் பணி:
தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார்.
1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தார். பனையோலை எழுதுவதிலும் இலக்கணத்தைக் கற்பிப்பதிலும் விற்பனராகத் திகழ்ந்தார்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை வித்துவான் தியாகராச செட்டியார் என்னும் தலைப்பில் உ. வே. சாமிநாதையர் நூலாக எழுதியுள்ளார்.
