பேருந்து ஓட்டுநர்

bookmark

"ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?"

"பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்."

அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்....

அவள்: செருப்பு பிஞ்சிடும்

அவன்: பரவால்ல.. கையில எடுத்துட்டு ஓடிடலாம்...

ஒருவன்: சார்.. சார்.. என் நாய் தொலைஞ்சு போச்சு. கண்டுபிடிச்சு கொடுங்க.

போலீஸ்: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க. 

ஒருவன்: என்னைப் பார்த்தால் வாலாட்டும்.

"அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"

"நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"

"ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி."

"ஏன்?"

"எப்பப் பார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்."