முளைக்கீரை

முளைக்கீரை

bookmark

முளைக்கீரை

முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிராகும். மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. முளைக்கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை வளர்கிறது. நன்றாக உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது. முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் கீரையாகும்.