மொச்சை
மொச்சை
மொச்சை (Vicia faba) என்பது அவரை, பட்டாணிக் குடும்பத்தச் சேர்ந்த பூக்குந் தாவரமாகும். தட்டைஅவரை, ஃபாவா அவரை எனவும் அழைக்கப்படுகிறது. இது தோன்றிய இடம் அறியப்படவில்லை.[1]:160 இது உணவுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஊடுபயிராக நிலத்தை வளப்படுத்தவும் பயிரிடப்படுகிறது. குதிரைத் தீவனமாகப் பயன்படும் இதன் வன்மையான சிறிய கொட்டைகளைக் கொண்ட பயிரிடும்வகை கொள்ளு( Vicia faba var. equina ) எனப்படுகிறது Pers., இது தாவரவியலாக ஏற்கப்பட்ட பயிரிடும்வகையின் பெயராகும்.[2]
சிலர் தட்டை மொச்சையை உண்டால் குருதிச் சிதைவு நோய்க்கு ஆளாகின்றனர். இது G6PDD வகை வளர்சிதைமாற்ற ஒழுங்கின்மையால் ஏற்படுகிறது. மற்றபடி, விதையின் மேலுறையை நீக்கிப் பருப்பாகப் பச்சையாகவும் வேகவைத்தும் வறுத்தும் உண்ணலாம். இளங்காய்களாக விதை மேலுறையைச் சேர்த்தே கொட்டையாக உண்ணலாம். மேலும் இளங்காய்களைத் அதன் பொட்டுத் தோலுடன் உண்ணலாம்.
