மொய் மறந்துட்டேன்....
"அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?"
"ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"
"என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.."
"அப்படி என்ன பண்ணிட்டான்..?"
"என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."
"சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?"
ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"
"டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது."
"எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."
"எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."
"கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.."
"அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."
