அபார்ஷன் மாசம்

bookmark

"பிப்ரவரியை ஏன் 'அபார்ஷன்' மாசம்னு சொல்றே?"

"அது மத்த மாசங்களைவிட அரை குறையாப் பிறந்திருக்கே!"

"என்ன... தலைவருக்கு தெலுங்கே தெரியாது! திடீர்னு இப்ப தெலுங்குல பொளந்து கட்டறாரு...?"

"ஆந்திராவுல இருந்து வந்த ஸ்பெஷல் சரக்கை இல்லே அடிச்சிருக்காரு...!"

ஒருவன்: "என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க."

மற்றவன்: "அவ்வளவு அழகான குரலா?"

ஒருவன்: "இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்."

"நீ ஏன்டா மொட்டை போட்டிருக்கே?"

"என் பொஞ்சாதிக்குத் தலையைத் தடவ வசதியாயிருக்குமே?"

"பொண்ணு ஆயில்ய நட்சத்திரமா?"

"ஆமா! எப்படிக் கரெக்டா சொல்றீங்க?"

"அதான் முகத்துல 'ஆயில்' வடியுதே!"