அவரைக்காய்
இந்தியா போன்ற தெற்காசிய காலநிலையில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் அவரை. விவசாயம் பழகிய காலத்திலிருந்தே இதன் காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு.
அவரைக்காயில் ஏராளமான வகைகள் உண்டு. சில வகைகளை இளம் காய்களாகவே பறித்து சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அடர் பச்சை, இளம் பச்சை, இளஞ்சிவப்பு என நிறங்களில் பொரியல் அவரைக்காய்கள் உண்டு.
சில வகைகள் காய்கள் முற்றி பழுத்து காய்ந்ததும் அதை உறித்து உள்ளிருக்கும் கொட்டைகளை எடுத்து சமைக்கப் பயன்படுத்துகிறோம். விளைச்சல் இல்லாத காலத்திற்காக இப்படியொரு சேமிக்கும் பழக்கம். இந்தக் காலக்கட்டம் எல்லா நேரங்களிலும் அவரைக்காய் விளைவதை சாத்தியமாக்கியிருக்கிறது.
