எருமை

எருமை

bookmark

எருமை

எருமை அல்லது நீர் எருமை (ஆங்கிலம்: buffalo) என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே (ஆங்கிலம்:Water buffalo)க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள்  கூறுகின்றன. இவ்விலங்கின் கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.