கத்திரிக்காய்

கத்திரிக்காய்

bookmark

கத்திரிக்காய்

சரும சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. இதில் அரிப்பை தூண்டும் அமிலம் உள்ளதால் இதனை உண்ணுவதை தவிர்க்கவும். 

அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள். முக்கியமாக கர்ப்பகால அறுவை சிகிச்சையின் போது இதனை மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

இதில் நிகோடின் உள்ளது. ஆனால் இது புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன்படுகிறது.

இதை அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது.

இதை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கலாம்.

கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, அதில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கும். இதனால் செரிமான கோளாறுகள் சரி செய்யப்பட்டு மலச்சிக்கல் குணமாகும்.

இதில் உள்ள நீர் சத்தானது உடல் சூட்டைத் தணிக்கின்றது.

மேலும் மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.

நமது உடலில் அளவுக்கு அதிகமாக இருக்க கூடிய இரும்புசத்தின் அளவை சரிசெய்கின்றது.

கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையானது குறைக்கப்படுகிறது.

இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

கத்தரிக்காய் உணவில் சேர்த்து வரும் பொழுது நுரையீரல் ஆனது சுத்தம் ஆக்கப்பட்டு சுவாச பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.

இதில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் நல்ல நினைவாற்றலை பெறலாம்.

இதில் உள்ள வைட்டமன் சி உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.

இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடலை பாதுகாக்கிறது.

இது தலைக்கு ஈரப்பதத்தை தருகிறது. எனவே தலை முடி உதிர்வு, தலைமுடி வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமன்கள் போன்றவை அதிக அளவு நிறைந்துள்ளதனால் சருமத்தை இளமையோடு வைக்க உதவுகிறது.

இது சருமத்தில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை சரி செய்து சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் இது உடல் சோர்வையும் நீக்குகிறது. இதில் உள்ள லூட்டின் போன்ற அன்டிஆக்ஸடன்ட்கள் கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது.

உடலில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள் இதை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கருவுற்று இருக்கும் ஆரம்ப காலத்தில் பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய்க்கு கரு சிதைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இதை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது அது வயிற்றில் வாயு தன்மையை ஏற்படுத்தும்.