கழுகு

கழுகு

bookmark

கழுகு

பறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வரை வாழக்கூடியது. 

மேலும், இவை தான் பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.

இவற்றின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு அதிகமானது. இதனால், அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலை கூட வேட்டையாட முடியும்.

இவை புயல் காற்றின் மூலம் மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனால் புயலை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.

எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கும் கந்தக அமிலத்தை உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் பட்ட இடம் கருகிவிடும்.

இது தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். 

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.