காப்பி
காப்பி
காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே (Rubiaceae) என்னும் சேர்ந்தது. குடும்பத்தைச் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் தான் இது முதலில் கூறப்படுகிறது. கண்டறியப்பட்டதாக பின்னர் எத்தியோப்பியாவில் இருந்து எகிப்து மற்றும் ஏமன் நாட்டிற்கு பரவியது. அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கு பரவி, பின் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், பிறநாடுகளுக்கும் பரவியது. → காப்பி என்னும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய Coffee என்பதன் தமிழ் வடிவம் ஆகும். காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.
