குடைமிளகாய்

குடைமிளகாய்

bookmark

குடைமிளகாய்

இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது.

வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. 

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. 

மூட்டு வலிக்கு மருந்தாகிறது.

செரிமானப் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. 

இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

இதில் உள்ள கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.

ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. 

ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

இதில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.

கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடை மிளகாய் காக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

இது ரத்தத்தை நீர்க்க செய்து விடும்.

இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் போது, வயிற்று போக்கு ஏற்படுத்துகிறது.