குதிரைவாலி
குதிரைவாலி
குதிரைவாலி புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிராகும். இவை நம் மூதாதையர் காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. உணவாகப் இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நோபாளம், சீனா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சீனா மற்றும் ஜப்பானில் நெற்பயிர் உற்பத்தி இழப்பு ஏற்படும் போது குதிரைவாலி மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது. F இந்தியாவில் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்தரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
