கொத்தவரங்காய்

கொத்தவரங்காய்

bookmark

கொத்தவரங்காய்

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இரவில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தோல் நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. 

இதில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.

இதில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி எலும்புகள் தேய்மானம் அடைவதை தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன.

இதில் காணப்படும் நார்ச்சத்தானது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது.

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது.

இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதில் உள்ள ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இல்லாமல் வளர உதவுகிறது..

இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. 

சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது.

வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது.