சி.பாலசுப்பிரமணியன்

bookmark

கல்வி:

பள்ளி இறுதி வரை கண்டாச்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழிலக்கியத்தில் கலை இளவர் (சிறப்பு) பட்டம் பெற்றார். அப்பொழுது பேராசிரியர்கள் மு. வரதராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகியோரிடம் பயின்றார். பின்னர் குறுந்தொகை - திறனாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1963 ஆம் ஆண்டில், ஆய்வு நிறைஞர் பட்டமும் சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அவரின் பணி:

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1989 திசம்பர் 4ஆம் நாள் முதல் 1992 திசம்பர் 3ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

முனைவர் அவர்கள் எழுதிய சில நூல்கள்:


 

  • அலை தந்த ஆறுதல்

  • அறநெறி (திசம்பர் 1991)

  • அறவோர் மு.வ.

  • ஆண்டாள் (மார்ச் 1994)

  • இலக்கிய அணிகள் (1972)(தமிழக அரசின் பரிசு பெற்றது)

  • இலக்கிய ஏந்தல்கள்

  • இலக்கியக் காட்சிகள்

  • உருவும் திருவும்

  • கட்டுரை வளம்

  • கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்

  • Papers in Tamil Literature

  • The status of women in Tamilnadu during the Sangam Age

  • A Critical Study of Kuruntokai

  • A Study of the literature of the Cera Country

  • அவரைப் பற்றிய விமர்சனங்கள்:

    சி. பாலசுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றும்பொழுது புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் இடம்பெற்றிருந்த பாரதிதாசன் பாடல்களில் இயற்கை என்னும் 32 பக்கக் கட்டுரை, பேராசிரியர் பீர் முகமது சம்சுதீன் என்பவர் எழுதிய, அன்னம் பதிப்பகத்தின் வெளியீடான, பாரதிதாசன் பாடல்களில் இயற்கை என்னும் நூலில் இருந்து சொல் மாறாமல் சி. பாலசுப்பிரமணியனால் படியெடுக்கப்பட்டு இருக்கிறது எனக் குற்றம்சாட்டப்பட்டது.