செகண்ட் கிளாஸ்

bookmark

"டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..."

"அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"

"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்."

"அப்புறம்....?"

"கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்."

"பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?"

"ரைட் சொல்லிட்டார்."

"என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்."

"ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க."

"செகண்ட் கிளாஸ்தான்...!"

"டென்சன் அதிகமானால் என்னவாகும்?"

"லெவன் சன் ஆகும்."