தட்டைப்பயிர்

தட்டைப்பயிர்

bookmark

தட்டைப்பயிர்

காராமணி (cowpeaVigna unguiculata) என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர். இது கருமை நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

பயற்றினைத் தனியே வேகவைத்தும் உண்பர். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்றவற்றிலும் சேர்த்துக்கொள்வர். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் சுடுவர். காராமணிப்பயறு மட்டுமல்லாமல் காராமணிப் பயற்றங்காய்களும் காய்கறிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மொச்சைக்கொட்டை போல காராமணிப் பயறும் வளி(வாயு)ப் பொருள் எனத் தமிழ்மருத்துவர்கள் கூறுகின்றனர். வானம்பார்த்த புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டுவந்த காராமணிப்பயறு இப்போது நீர்ப்பாசனம் செய்தும் பயிரிடப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் காராமணிப் பயற்றங்காய்கள் கிடைக்கின்றன.