தவளை
தவளை
இவை வாய் மூலம் நீரை அருந்துவதில்லை.
உடல் நீளத்தை விட 20 மடங்கு அதிகமாக குதிக்கும்.
இவற்றிற்க்கு நுரையீரல்கள் உண்டு. ஆனால் விலா எலும்புகள் கிடையாது. அதன் காரணமாக மார்பை விரியவும் சுருங்கவும் செய்து காற்றை உள்ளே இழுக்கவும் வெளியே விடவும் முடியாது.
நிலத்தில் இருக்கும் போது தனது மூக்குத் துவாரங்கள் மூலம்தான் சுவாசிக்கிறது. அதில் ஒரு வாழ்வு அமைந்துள்ளது.
தொண்டை தசைகள் துடிக்க வைப்பதன் மூலம் காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் செய்கின்றது.
நிமிடத்திற்கு 120 முதல் 140 துடிப்புகள் வரை இருக்கும்.
நிலத்தில் இருக்கும் போது அதன் சருமம் நுரையீரல்களை விட சுவாசிப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது.
சருமம் ஈரமாக இருந்தால் தான் காற்றை கிரகித்துக் கொள்ள முடியும். சருமம் எப்போதும் ஈரமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்படி செய்ய அது ஒரு சளிப்பொருளை சுரக்கிறது. சருமம் காற்றையும் நீரையும் கிரகித்துக் கொள்கிறது.
