திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன்

bookmark

வாழ்க்கை வரலாறு திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர். விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர் அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.