ந.மணிமொழியன்

bookmark

இளமைக் காலம்:

ந. மணிமொழியன் 1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம் கொட்டகுடி எனும் கிராமத்தில் ஆன்மிகச் செல்வர் சா.ம.பெரி.நடராசன் திருமதி சௌந்தரம்மாள் தம்பதியருக்கு மூத்தமகனாக பிறந்தார். மணிமொழியன் தம் தந்தையார் கொட்டகுடியில் உருவாக்கிய ஆரம்ப பாடசாலையில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து காரைக்குடி முத்துக் கருப்பன் விசாலாட்சி நகராட்சி பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

குடும்பம்:

மணிமொழியன் தனது 25ஆம் வயதில் கமலாதேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

ஆற்றிய பணிகள்:

தனது பணிக்காலத்தில் அயராது உழைக்கும் பழக்கம் கொண்டிருந்த மணிமொழியனார் பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தார். அவற்றில் குறிப்பிடும்படியானவை.


 


 


 


 


 


 


 


 


 


 

  • மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், மேலாண்மை இயக்குனர்

  • சென்னை வீ.கே.கே. ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டின் நிர்வாக இயக்குநர்

  • சென்னை மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னிக்கின் நிர்வாக அறங்காவலர்

  • மதுரை வீ.கே.கே.சேரிட்டீஸ் குழுவின் நிர்வாக அறங்காவலர்

  • மதுரையில் வீ.கே.கே. பிளே குரூப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர்

  • மதுரை சியாமளா ப்ரசிங் மெட்டல்பான்ட்ஸ் பிரைவேட் லிமிடட்டின் தலைவர்

  • மதுரை எம்.ஜி.எஸ் பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுவின் தலைவர்

  • மதுரையில் பாரத் ஸ்கௌட்ஸ் அன்ட் கைட்ஸ் மாநிலத் தலைவராக பணியாற்றினார்

  • தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கத்தின் நிரந்தர மாநிலத் தலைவராக 31 ஆண்டுகள் பணியாற்றியவர்.

  • மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் துணைவேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

  • தொழிலதிபர், தமிழ் ஆர்வலர், திருக்குறள் செம்மல் எனும் எல்லைகளைத் தாண்டி தெய்வீகத் திருப்பணிகளிலும் ஆன்மிக அருட்பணிகளிலும் ந.மணிமொழியனார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

  • மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு ஆசிய நாடுகளுக்கு திருக்குறள் பரப்பும் பயணங்களை மேற்கொண்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக அமெரிக்கா, கனடா, இலண்டன், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்குப் பயணித்து உரையாற்றியிருக்கிறார். பாரிஸ் கம்பன் கழகம் அழைப்பினை ஏற்று லண்டன், பிரான்சு நாடுகளிலும் மலேசியா நாட்டிலும் உலகத் திருக்குறள் பேரவையின் கிளைகளைத் தொடங்கி வைத்து (20 செப்டம்பர்) 2012ல் சிறப்புரையாற்றினார்.

    உலகத் திருக்குறள் பேரவையின் சர்வதேச முதன்மை பொதுச் செயலாளராக 30 ஆண்டுகள் செய்தார்.

    பெற்றுள்ள விருதுகள்:

    "திருக்குறள் செம்மல்" - தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் 1989இல் வழங்கப்பட்டது.

    "தேசிய ஒருமைப்பாட்டு விருது" - 1996 இல் தேசிய ஒருமைப்பாடு இயக்கத்தின் சார்பில் ஜி. கே. மூப்பனார் அவர்களால் வழங்கப்பட்டது.

    "குறட்பணிச் செம்மல்" - 2001இல் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது.

    "தமிழ்ப் பேரவைச் செம்மல்" - 2007 இல் தமிழக அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களால் வழங்கப்பட்டது.

    "தமிழ்ச் சங்கச்செம்மல்" - 2008 இல் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் மன்னர் குமரன்சேதுபதி அவர்களால் வழங்கப்பட்டது.

    "இறைப்பணிமணி" - 1995இல் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்டது.

    "மதிப்புறு முனைவர்" - 2007 இல் அமெரிக்கா சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டது.

    "தமிழ்ச் செம்மல் விருது" - 2015 தமிழக அரசு விருது

    எழுதிய நூல்கள்:

    இலக்கியம் பேசி மகிழ்வோம், அன்னம் பதிப்பகம், சிவகங்கை.

    திருக்குறள் பயணம், அன்னம் பதிப்பகம், சிவகங்கை.

    இறைமையில் இசைந்த இருவர், அன்னம் பதிப்பகம், சிவகங்கை.

    குறள் நிலா முற்றம், மறுபதிப்பு, மீனாட்சிப் பதிப்பகம், மதுரை.

    த பயோகிராஃபி ஆஃப் வீ.கே.கே. வெற்றிச்செல்வர் - இணை ஆசிரியர் ந.மணிமொழியன், அன்னம் பதிப்பகம், சிவகங்கை.

    மணிமொழியம் கட்டுரைத் தொகுப்பு (அச்சில்), வானதி பதிப்பகம், சென்னை.