நக்சலைட்

bookmark

"உங்க வீட்டு ஃபேன் ஏன் நின்னு நின்னு ஓடுது?"
"தவணை முறையிலே வாங்கினது!"

"அழகாத்தானே குழந்தை பொறந்திருக்கு! அப்புறம் ஏன் அழுவுறாங்க?" 
"பொறந்த குழந்தை அழலையே! அதான் அவுங்க அழுவுறாங்க!"

"சாப்பிட வாங்க நிகழ்ச்சியிலே புது அயிட்டங்களைச் செஞ்சு என் மனைவி பரிசு வாங்கிட்டா!" 
"அப்படி என்னத்தைச் செஞ்சாங்க?" பாவக்கா பாயாசம்! வெண்டைக்காய் புட்டு! வாழைக்கா ரசம்! சுண்டைக்காய் ஜூஸ்!"

"தூங்கிக்கிட்டிருக்கும் போது ஏன்டா மிதிக்கிறே?" 
"உயிரோட இருக்கியான்னு பார்த்தேன்."

"காட்டுக்குள்ளே 'டார்ச்லைட்' கூட இல்ல...! பயமா இருக்கே!"
"பயப்படாதே! நக்ச'லைட்' இருக்கு!"