நிலக்கடலை

நிலக்கடலை

bookmark

நிலக்கடலை

நிலக்கடலை (peanut) (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இதன் தரப்படுதப் பட்ட பெயர்களாக வேர்க்கடலை, நிலக்கடலை ,மணிலாக்கடலை, கடலைக்காய் (கலக்கா), மணிலாக்கொட்டை (மலாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இதற்க்கு கச்சான் என்ற பெயர் இலங்கை,தமிழரிடம் பரவலாக காணப்படுகிறது.

நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.