நெல்லிக்காய்
சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த தீர்வாக நெல்லிக்காய் விளங்குகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது
உடல் எடையை குறைக்க மற்றும் இதய நலன் மேம்பட நெல்லிக்காய் பெரிதும் உதவுகின்றது.
நெல்லிக்காய் சருமம் இளமையான தோற்றம் பெற உதவுகிறது. மேலும் உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்கள், வயிற்றுப் புண் ஆகியவற்றையும் குணமாக்கும் தன்மை கொண்டது.
இரத்தசோகைக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கவும், கண் பார்வை மேம்படவும், செரிமான பிரச்சனைகள் தீரவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.
நெல்லிக்காய் கட்டி அல்லது வைரஸ் செல்கள் போன்றவற்றை நீக்கவும், மூட்டு அழற்சியை போக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
மேலும் மூட்டு வீக்கம், மூட்டு வலி, வலியுடன் கூடிய வாய்ப்புண் போன்ற அனைத்து வித பிரச்சனைக்கும் நெல்லிக்காய் தீர்வளிக்கிறது.
