பக்கத்தில் இருக்கும் போதே

bookmark

புதிதாக லாரி வாங்கிய ஒருவர் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வண்டியை ஓட்டச் சொன்னார். வண்டி ஓடத் தொடங்கியதும், கடமுட என்று சத்தம் கேட்டது.

உடனே அவர் என்ன சத்தம் கேட்குது? என்று டிரைவரைக் கேட்டார்.

நான் கியரை மாற்றினேன். அதனால்தான் அந்த சத்தம் என்றான் டிரைவர்.

நான் பக்கத்தில் இருக்கும் போதே நீ கியரை மாற்றினால் நான் இல்லாத போது நீ என்ன செய்ய மாட்டாய்? என் வண்டியை விட்டு இறங்கு, என்று கோபத்துடன் கத்தினார், அவர்.