பட்டுப்புழு

பட்டுப்புழு

bookmark

பட்டுப்புழு

பட்டுப்புழு என்பது வேளாண்மை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பட்டுப்பூச்சி இனமான Bombyx mori யின் குடம்பிப்புழு நிலையாகும். பட்டு நூலை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதனால், இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பூச்சியினமாக உள்ளது. துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மரம்) என்றழைக்கப்படும் ஒரு தாவரத்தின் இலைகளே இதன் மிக முக்கியமான உணவாக இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த இனமானது வட இந்தியா, வட சீனா, கிழக்கு உருசியா, யப்பான் போன்ற நாடுகளில் வன இனமாகக் காணப்பட்ட Bombyx mandarina என்ற பட்டுப் பூச்சி இனத்தை வேளாண்மை வளர்ப்புக்கு தொடர்ந்து உட்படுத்தி வந்தபோது உருவாகிய இனமாகும். அனேகமாக இது சீன வகைப் பட்டுப்பூச்சியிருந்து உருவான வேளாண்மைக்குட்பட்ட இனமாகும்[1]. இது பல்லாண்டு காலமாக பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பட்டுப்புழு வளர்ப்பு நடை முறையிலுள்ளது. இந்த இனமானது தனது இனப்பெருக்கத்திற்கு, மனித வளர்ப்பிலேயே முற்று முழுதாய் தங்கியிருப்பதுடன், தாமாக காட்டு இனமாக இருக்க முடியாத நிலையிலுள்ளது.