பலாப்பழம்
பலாப்பழம் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, இரத்த சோகை குறைபாடு போன்றவற்றிற்கு சிறந்த பலனை தரவல்லது.
பலாப்பழத்தில் வைட்டமின் A அதிக அளவு உள்ளதால் கண்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை சமப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை தருகிறது.
மேலும், பலாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும், குடல் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.
உடலில் தைராய்டு சுரப்பிகளில், ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களைத் தடுத்து நல்ல பலனையும் கொடுக்கிறது.
சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு பலாப்பழ ஜூஸ் சிறந்த மருந்தாகிறது.
