பிக்கப்
"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?"
"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி: !!!!
"பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?"
"எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
"லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.."
"ஏன்..?"
"எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
