பொறம்போக்கு
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?
மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!
லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..
கீதா: என்ன வியாபாரம்?
லதா: சேமியா வியாபாரம்.
"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?
"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!
"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."
"எப்படி சொல்றீங்க?"
"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
