மரங்களை வடிவமைத்தல்
கம்பி கட்டுதல்
மரத்தை நாம் விரும்பும் வகையில் வடிவமைக்க அலுமினியக் கம்பியே நல்லது. வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் கம்பி கட்ட வேண்டும். விறைப்பாக சுற்றும்போது விடக்கூடும். குளிர்காலத்தில் மரம் இருப்பதால் கிளைகள் முதலில், கம்பி ஒடிந்து கம்பியை மரத்தின் அடிப்பாகத்தில் தொடங்கிப் பின் சீரான இடைவெளியில் தண்டு முழுதும் சுருள் சுருளாகச் சுற்ற வேண்டும். முதலில் தண்டு, பின் அடர்த்தியான கிளைகள், இறுதியாகச் சிறிய கிளைகள். கிளைகளிலும் கம்பி அடியிலிருந்து தொடங்கி நுனிக்குச் செல்ல வேண்டும். கம்பியின் முனை, செடியில் சேதம் ஏற்படுத்தாமல் கவனமாக சுற்ற வேண்டும். கிளைகளின் அடர்த்திக்கேற்பக் கம்பியின் தடிமன் இருக்க வேண்டும். சுற்றப்பட்ட கம்பி அதிக இறுக்கமாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது. 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும். கம்பியை நறுக்கி எடுப்பது சிறந்தது.
கவாத்து செய்தல்
மரத்தின் தண்டுப்பகுதி, கிளைகள் ஆகியவை பருமனாகவும், அவை வளரும் திசைகளின் போக்கை மாற்றவும், தேவையில்லாத, அதிகப்படியான கிளைகளை நீக்கவும், மரத்தின் அழகான வடிவத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவும் கத்தரிப்பு தேவைப்படுகிறது. வேர், கிளை, இலை என மூன்றிற்கும் அவ்வப்போது கத்தரிப்பு செய்ய வேண்டும்.
வேர்களுக்கு கவாத்து
கன்றுகளை தொட்டியில் நடும்போதே, கிளைவேர்கள் நாலாப் பக்கமும் அதிகளவில் ஆணிவேரை வளர்ந்திருந்தால் கத்தியால் வெட்டிவிட வேண்டும். கிளைவேர்கள் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் அது நன்கு வளர்ச்சி பெறும் வரை ஆணிவேரை வெட்டக்கூடாது.
கிளைகளுக்கு கவாத்து
வளரும் மரங்களில் நுனிக்குருத்தை அகற்றாவிட்டால் போன்சாய் தொடர்ந்து உயரமாக வளரும். தேவையான உயரம் வந்த பிறகு நுனிக்குருத்தைக் கிள்ளி விட்டால் பக்கக்கிளைகள் துளிர்த்துச் செடி அடர்த்தியாக வளரும். எனவே, செடியின் அமைப்புக்கு ஏற்றது போல் நுனி மற்றும் பக்கவாட்டுக் குருத்தை கத்தரித்து அமகான வடிவத்தில் கத்தரித்து அழகான வடிவத்தில் வளர்க்கலாம்.
இலைகளுக்கு கவாத்து
மரத்தின் உட்பக்கக் கிளைகளுக்குச் சூரிய ஒளி, காற்று தாராளமாகக் கிடைக்கவும், புதிய இலைகள் தோன்றவும் இலைகளுக்கு செய்ய வேண்டும். கவாத்து நல்ல ஆரோக்கியமான மரங்களில் மட்டுமே இலைக் கத்தரிப்பு செய்ய வேண்டும். இலைகளை வெட்டும்போது இலைக்காம்பை விட்டுவிட்டு அனைத்து இலைகளையும் வெட்டி விட வேண்டும். இதனால் குருத்து பாதுகாக்கப்படும். இலை வெட்டுக்கு முன்னும் பின்னும் சில நாட்களுக்கு உரமிட கூடாது. இலை வெட்டப்பட்ட பின் சில நாட்கள் நிழலில் வைத்து நீர் விட்டுப் பராமரிக்க வேண்டும். இலைக்கத்தரிப்பு செய்வதால் சில ஆண்டுகளில் போன்சாயின் இலைகள் சிறுத்துக் காணப்படும்.
வளர்க்கக்கூடிய மரங்கள்
மாதுளை, பீச், மேப்பிள், க்ராப் ஆப்பிள், பைன்ஸ், மேப்பிள்ஸ், லார்ச்சஸ், சிடார், செர்ரீஸ், ஜுனிஃபர்ஸ், பேரி, பிளம்ஸ், ஆரஞ்சு, நாவல், ஆலமரம் மற்றும் அரச மரம் என எந்த வகையான மரமாக இருந்தாலும் நமக்கு தேவையான வடிவத்தில் வளர்க்கலாம்.
