மாதுளை பழம்

மாதுளை பழம்

bookmark

மாதுளை பழம் 

மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.

மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.

மாதுளை (PomegranatePunica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.