முலாம் பழம்
முலாம் பழம்
முலாம் பழம் அல்லது திரினிப்பழம் மாந்தர் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற உள்ளீடும் சுவையும் இதற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் ஒதுக்கிவிட்டு உண்பர். வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப் பழத்தையும் உண்பர். திரினிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும். திரினிப் பழத்தின் தோல் வன்மையாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைகாலத்தில் பலன் தரும் கொடிப்பயிர்.
முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் பழவகைகளுள் முக்கியமானது. கூடிய முலாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர். ஆனால் இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா, இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
