ராஸ்பெர்ரி பழம்
புற்றுநோயைத் தடுக்கும் எல்லாஜிக் அமிலம் இதில் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வாய், தொண்டை,
பெருங்குடல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
ராஸ்பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
இப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
கடுமையாக காய்ச்சல் இருக்கும் பொழுது ராஸ்பெர்ரி பழச்சாற்றை அருந்தினால் உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
