வாடாமல்லி

வாடாமல்லி

bookmark

வாடாமல்லி

வாடாமல்லி (Gomphrena globosa) பொதுவாக குளோப் அமராந்த், மக்மலி மற்றும் வாடாமல்லி என அழைக்கப்படுகிறது, இது அமராந்தேசி வகையை சார்ந்தது. பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன.

எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு பெயர் வாடாமல்லி. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். கோம்பிரினா குளோபோசா என்பது இதன் தாவர பெயர் ஆகும். குளோபஸ் அமராச்சஸ் என்ற பெயரும் இதற்கு உள்ளது. இது வயலட் நிறத்தில் பூக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலும் வாடாமல்லி பூக்கள் கிடைக்கும். வாடாமல்லி பூ மாலை கட்டவும், அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.