வெங்காயம்

bookmark

"பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...."

"ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?"

"இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"

"என்ன! அந்த பாகவதர் கச்சேரிக்கு கிழிஞ்ச சட்டைய போட்டுட்டு வர்றாரு?"

"அவரு எப்பவும் பஞ்சப்பாட்டுதான பாடுவாரு!"

"உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய பணக்காரராமே?"

"ஆமாங்க.. வெங்காய வியாபாரி!"

"உனக்குத் தெரிஞ்ச 'வாயில்லா ஜீவன்' ஒன்றின் பேரைச் சொல்லு?"

"என் அப்பா சார்!"

"போகி ஸ்பெஷல் லைவ் புரொகிராமுக்கு வந்த டைரக்டர் ஏன் கடுப்பாயிட்டார்?"

"போன்ல ஒரு நேயர், 'உங்க படம்லாம் மக்கும் குப்பையா, மக்கா குப்பையா'னு கேட்டாராம்!"