வெற்றிலை
வெற்றிலை
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.
