கார்முகப் படலம் - 758

bookmark

758.    

‘இச் சிலை உதைத்த கோற்கு
   இலக்கம் யாது?’ என்பார்;
‘நச் சிலை நங்கைமேல்
   நாட்டும். வேந்து’ என்பார்;
‘நிச்சயம் எடுக்கும்கொல்
   நேமியான்!’ என்பார்;
சிற்சிலர். ‘விதி செய்த
   தீமை ஆம் என்பார்.  
 
இச்சிலை  - இந்த வில்; உதைத்த கோற்கு - (தன்னிடத்திலிருந்து)
செலுத்திய  அம்புக்கு;  இலக்கம்  யாது  -  குறியாக அமைவது எது;
என்பார்  -  என்று  சொல்பவர்களும்;  வேந்து  -  சனக  மன்னன்;
நச்சிலை  -   பெருமை  மிக்க  இந்த  வில்லை;  நங்கை  மேல்  -
நங்கையான   இச்  சீதையின்   திறத்திற்காகவே;  நாட்டும்  -  நிலை
நிறுத்தி?யுள்ளான்;  என்பார்  -  என்று கூறுபவர்களும்; நேமியான் -
சக்கரப் படை ஏந்திய திருமாலாகிய இந்த இராமனும்; நிச்சம் எடுக்கும்
கொல்  - உறுதியாக இந்த வில்லை எடுத்து வளைப்பானா; என்பார் -
என்று  கூறுபவர்களும்; சிற்சிலர் - சிலபேர்; விதி செய்த தீமை தான்
-  ஊழ்வினை  விளைத்த தீமையே (இவ்வாறு அமைந்தது); என்பார் -
என்று வருந்துபவர்களும் (ஆனார்).

வில்லைக் குறித்துக் கண்டவர்  பலபடப் புனைந்து கூறுவது.  உயர்வு
குறிக்கும் இடைச்சொல்.                                       9