குலமுறை கிளத்து படலம் - 749
இராமனின் மேன்மை
அகலிகைக்கு முன்னை உருத் தந்த பெருமை
749.
‘கோதமன்தன் பன்னிக்க
முன்னை உருக் கொடுத்தது. இவன்.
போது நின்றது எனப்பொலிந்த.
பொலங் கழற் கால் பொடி கண்டாய்;
காதல் என்தன் உயிர்மேலும்
இக் கரியோன்பால் உண்டால்;
ஈது. இவன்தன் வரலாறும்.
புய வலியும்’ என உரைத்தான்.
இவன் - இந்த இராமனது; போது நின்றது என - செந்தாமரை
(வாடி வதங்காமல் எப்பொழுதும் ஒரு தன்மையாகப் பொருந்தி
நின்றது) என்னுமாறு; பொலிந்த - விளங்குகின்றன; பொலன் கழற்கால்
- பொற்கழலை யணிந்த திருவடியின்; பொடி - தூளியே; கோதமன்
தன் பன்னிக்கு - கௌதம முனிவனின் மனைவியான அகலிகைக்கு;
முன்னை உரு - பழைய வடிவத்தை; கொடுத்தது கண்டாய் - (சாபம்
நீக்கி) தந்து அருளியதைக் காண்பாய்; என்தன் உயிர் மேலும் -
எனக்கு (எனது) உயிரிடத்து உள்ளதைக் காட்டிலும்; இக்கரியோன்பால்
- கரிய இந்த இராமனிடத்தில்; காதல் உண்டு - அன்பு மிகுதியாக
உள்ளது; இவன்தன் வரலாறும் -இந்த இராமனது தூய வரலாறும்; புய
வலியும் - தோள் ஆற்றலும்; ஈது என-இதுவாம் என்று; உரைத்தான்
- (கோசிக முனிவன் சனகனுக்குத் தசரதன் மகனான இராமனது
பண்புகளைக்) கூறி முடித்தான்.
இராமனது திருவடி கூடப் பெருமைமிக்கது என்றால் இவன்
திருமேனியின் பெருமை கூறல் வேண்டா என்பது இராமன்: கரிய
நிறம் உடையவன். அதனால் இராமனைக் ‘கரியோன்’ என்றார்.
‘இவ்வளவு பெருமைமிக்க இராமனிடம் என் உயிரினும் எனக்கு அன்பு
மிகுதியாக உள்ளது’ என்றான் விசுவாமித்திரன் பன்னி - பத்நீ
என்பதன் திரிபு. காதல் - பத்திமை. ‘காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன்’ - திருமாலை - 26. 29
