ஜாதி மல்லி

ஜாதி மல்லி

bookmark

ஜாதி மல்லி

சாதி மல்லிகை அல்லது ஜாதி மல்லிகை அல்லது சந்தன மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum grandiflorum subsp. grandiflorum) தெற்காசியாவில் காணப்படும் மல்லி இனத்தின் துணையினமாகும். ஆசிய பெருமல்லி இனத்தின் கீழ் அமைந்துள்ள, துணை இனமாகும். ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என ஆங்கிலத்திலும், சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், இதன் மலர்கள் பெண்களின் சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில், இது சால்ட் ரேஞ் மற்றும் ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள காடுகளில், கடல்மட்டத்திலிருந்து 500-1500 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இது சில நேரங்களில், மல்லிகையின் (Jasminum officinale) ஒரு வகையாகவே கருதப்பட்டது.யாசுமினம் கிராண்டிப்ளோரம் (Jasminum grandiflorum) என்ற இனத்தில் இரு சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் இந்த துணையினம் மட்டுமே பல கண்டங்களில் காணப்படுகிறது. மற்ற துணையினம்( Jasminum grandiflorum subsp. floribundum) அரபு நாடுகளிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் மட்டுமே காணப்படுகிறது.