ஜெலுசில் சிரப்
"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.."
"ஏன்?"
"கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"
"ஒரு பையன் மழைல நெனஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது அவன் தலை வீங்கிருக்கு....
ஏன்?"
"ஏன்னா அவன் கொட்டற மழைல நெனஞ்சான்."
"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?"
"அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்."
"குரைக்கிற நாய் கடிக்காது...! ஏன் தெரியுமா?"
"ரொம்ப யோசிக்காதீங்க... ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால செய்ய முடியாதில்ல அதான்"
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்."
"சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?"
"சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
