தேயிலை
தேயிலை
தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர். பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும், சீனாவில் இருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. தேயிலையை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன
