பசுமாடு
பசுமாடு
மாடுகளில் பெண் இனத்தை பசுமாடு என்றும், ஆண் இனத்தை காளைமாடு என்றும் குறிப்பிடுவர். இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள பசுமாடுகள் காளைமாடுகள் காரணத்தினால் பாலுக்காகவும், வண்டி இழுக்கவும், வயல்களில் ஏர்பூட்டி நிலத்தை உழவும், மற்ற கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. தமிழகத்தில் காளையை அடக்கும் விளையாட்டு ஒரு வீர விளையாட்டாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக 26 மாடினங்கள் காணப்படுகின்றன.
