பாகற்காய்
பாகற்காய்
அலோபதி மருந்துகளை உட்கொள்ளும் பொழுது இதனை பயன்படுத்த கூடாது. இது மருந்தின் தன்மையை முறியடிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு ஏற்படும்.
இவை குறைந்த ஆற்றல் வழங்குபவை. 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது
மாத்திரைகளுடன் சேர்த்து இதை சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம்.
இதன் நடுவில் இருக்கும் விதைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
இதை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும்.
ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
பசுமையாக உள்ள காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற தொல்லைகள் தீரும்.
இதன் ஜீஸ் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் பேணுவதற்கும் சிறுநீரகக்கற்களையும் நீக்கவும் உதவுகிறது.
தினமும் இதை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கப்படுகிறது. பசியினையும் அதிகரிக்கும்.
கணைய புற்றுநோய் செல்கள் வருவதைத் தடுக்கிறது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் எடை குறைகிறது.
பாகற்காயையோ அதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள தொற்றுகள், பருக்கள், தழும்புகள் வேகமாக மறையும்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் நம்மளுக்கு இருக்கும் மலச்சிக்கலை போக்குகிறது.
