சுரைக்காய்
சுரைக்காய்
உடல் சூட்டை குறைக்கும்.
இதன் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ப்ழச்சார்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க இதன் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக விளங்குகிறது.
இதை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும்.
இது நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
இதன் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.
தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் முன்பு தலைமுடிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேர்ந்து ஊறும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்
இது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உப்பு போடாமல் இதன் ரசத்தை குடிக்கக் கூடாது.
சமைக்காத சுரைக்காயை சாப்பிட்டால் வயிறு மற்றும் செரிமானத்தை தாக்கி அல்சர் வர காரணமாகி உடல் உறுப்புகளையும் பாதிக்கும்.
சரியான அளவு சுரைக்காய் சாற்றை குடிக்காமல் அளவுக்கு மீறி குடித்தால் மரணத்தைக் கூட விளைவிக்கும்.
கசப்பான சுரைக்காய் ஜூஸை குடிப்பதன் மூலம் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஏன் மரணத்தைக் கூட விளைவிக்கும்
